Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் 'சிங்கிள்ஷாட்' தீபாவளி - பார்த்திபன்

14 நவ, 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
My-single-short-diwali-says-Parthiban

சினிமா உலகில் வித்தியாசமாக சிந்திப்பவர் என கேட்டால் எல்லோருமே நடிகர், இயக்குனர் பார்த்திபனை கை காட்டி விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு படத்தையும் மாறுபட்ட கோணத்தில் தந்து கொண்டுள்ளார். கடந்தாண்டு அவர் எழுதி, இயக்கி, தனிவொருவனாக நடித்த 'ஒத்தசெருப்பு' பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று தந்தது. சமீபத்தில் மத்திய அரசின் பனோரமா விருதுக்கு ஒத்தசெருப்பு தேர்வானது. தனி ஒருவர் நடிப்பில் வெளியான படத்திற்காக ஆசியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் விருதுகளை பெற்றது.

சோலோஆக்டிங் பட வரிசையில் உலகின்13வது படமாகவும், தென்னிந்திய சினிமாவின் முதல் படமாகவும் பெருமை பெற்றது. அந்த படம் தந்த உற்சாகத்தில் ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் பட வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படம் தமிழ் சினிமாத்துறையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளி ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...

ஒத்தசெருப்புக்கு தியேட்டர்களில் அங்கீகாரம் கிடைக்காத வருத்தம் உள்ளதா?
நிறைய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய விருதும் நிச்சயம் பெறும்.

தீபாவளி ரிலீஸ்?
இந்த வருஷத்துல வரும், அடுத்த வருஷத்துல வரும் தீபாவளி, பொங்கல் என எல்லா பண்டிகையும் சேர்ந்து ஒரே நாளில் எனக்கு வரப்போகிறது. அதுதான் என் அடுத்த 'சிங்கிள்ஷாட்' படமான 'இரவின் நிழல்' வெளியாகும் நாள்.

அந்த படம் எப்போது ரிலீஸ்?

அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.

பொன்னியின் செல்வனிலும் நடிக்கிறீர்களாமே?

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். புஷ்பாகாயத்ரியின் வெப்சீரியலில் நடிக்கிறேன். விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறேன்.

விஜய்சேதுபதி 800 படம் சர்ச்சை குறித்து?
நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அவரே நன்றி வணக்கம் என சொல்லி விட்டார். நான் வேண்டுமானால் ந, வ என என் பாணியில் சொல்லவா?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபர்ணாவின் அமர்க்கள தீபாவளி : மதுரை தமிழ் பேசும் மலையாள மங்கைஅபர்ணாவின் அமர்க்கள தீபாவளி : மதுரை ... குஷ்புவின் அரசியல் தீபாவளி குஷ்புவின் அரசியல் தீபாவளி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in