Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபர்ணாவின் அமர்க்கள தீபாவளி : மதுரை தமிழ் பேசும் மலையாள மங்கை

14 நவ, 2020 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Aparna-special-interview

மலையாள கரையில் பிறந்து மதுரை தமிழ் பேசும் மதுரை பெண்ணாக 'சூரரைப்போற்று' படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திட காத்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி மனம் திறக்கிறார்...

இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷல், அமர்க்களமானது. சுதா கொங்கரா இயக்கத்தில் நான் நடித்த 'சூரரைப் போற்று' ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்து ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். நான் மலையாள பெண்ணா இருந்தாலும் ஓரளவு தமிழ் பேசுவேன். இந்த படத்தில் மதுரை பெண்ணாக மதுரை மொழி பேசி நடிச்சிருக்கேன்.

செந்தில், விருமாண்டி, கலைராணி, சத்யா மதுரை மொழி பேச பயிற்சி கொடுத்தாங்க. ஹீரோ சூர்யா மனைவியாக பொம்மி என்ற கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த அளவு முக்கியமான கேரக்டர் கிடைச்சது அதிர்ஷ்டம். நான் பார்த்து வியந்த 'இறுதி சுற்று'சுதா இயக்கத்தில் நடிப்பது கூடுதல் சிறப்பு.

நடிப்பு தவிர பரதநாட்டியம், குச்சுபுடி, மோகினி ஆட்டம் தெரியும். அம்மா, அப்பா இசைக் கலைஞர்கள் என்பதால் இசை கற்றேன். தமிழில் 'எட்டு தோட்டாக்கள்', மலையாளத்தில் பிரபல மியூசிக் டைரக்டர்கள் படங்களில் பாடியிருக்கேன். எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஆனால், நயன்தாரா தான் எனக்கு 'ஆல் டைம் பேவரட்' சீனியர் நடிகைகள் ரேவதி, ஊர்வசி நடிப்பெல்லாம் பார்க்கும் போது பெருமையாக இருக்கும்.

என்னை கூட நிறைய பேர் 'கண்கள் அழகாக இருக்கு'ன்னு சொல்லியிருக்காங்க. ரசிகர்கள் என் நடிப்பையும் கண்டிப்பாக ரசிப்பாங்க. கொரோனா சூழலில் படம் ஓ.டி.டி.,ல ரிலீஸ் ஆகுறது வருத்தம் தான். இருந்தாலும் நம்ம பாதுகாப்பு தான் முக்கியம். இந்த தீபாவளிக்கு கண்டிப்பா படம் பாருங்க சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை சந்தித்த பின் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய ரஜினிரசிகர்களை சந்தித்த பின் ... என் 'சிங்கிள்ஷாட்' தீபாவளி - பார்த்திபன் என் 'சிங்கிள்ஷாட்' தீபாவளி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in