நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
படம் : சூர்ய வம்சம்
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ஆனந்தராஜ்
இயக்கம் : விக்ரமன்
தயாரிப்பு : ஆர்.பி.சவுத்ரி
உழைப்பு வெற்றி தரும் என்ற, பாசிட்டிவ் எண்ணங்களை விதைத்த படம், சூர்யவம்சம். ஊர்ப் பெரியவர், சக்திவேல் கவுண்டருக்கு, தன் இளைய மகன், சின்னராசுவை பிடிக்காது. சின்னராசுவிற்கும், அவரது முறைப்பெண்ணான ப்ரியா ராமனுக்கும் திருமணம் நிச்சயிக்கின்றனர். ஆனால் ப்ரியா ராமனுக்கு, படிப்பறிவு இல்லாத சின்னராசுவை பிடிக்கவில்லை. இதையறிந்த சின்னராசு, ப்ரியா ராமனை திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும், தேவயானியை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் இருவரையும், சக்திவேல் கவுண்டர் வீட்டில் இருந்து வெளியேற்றுகிறார். இருவரும், தங்கள் உழைப்பால் முன்னேறுகின்றனர். தேவயானி, கலெக்டராகிறார்; சின்னராசு, தொழிலதிபராகிறார். இடையில் கொஞ்சம் நகைச்சுவை, சென்டிமென்ட், வில்லன், பாடல் என துாவி, அற்புதமாக இயக்கியிருந்தார், விக்ரமன்.
சக்திவேல் கவுண்டர் கதாபாத்திரத்தில் ஜனகராஜையும், சின்னராசுவாக விஜயையும் நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால், அந்த இரு கதாபாத்திரங்களிலும், சரத்குமார் நடித்தார். அவரின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில், முக்கியமானது, சூர்யவம்சம்.
மணிவண்ணன்,- ஆர்.சுந்தர்ராஜன் இருவரும் சேர்ந்து அடிக்கும் லுாட்டியில், தியேட்டரே அதிர்ந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலா காதலா, சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், திருநாளுத் தேரழகா... பாடல்கள், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இப்படம், சூர்யா வம்ஷா என, கன்னடத்திலும்; சூர்யா வம்சம் என, தெலுங்கிலும்; சூர்யவன்ஷம் என, ஹிந்தியிலும், ரீமேக் செய்யப்பட்டது.
லாலாலா லால லாலாலா... என, தமிழகத்தைத் தாலாட்டியது, சூர்யவம்சம்!