துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழில் நேரம், ராஜாராணி, நையாண்டி உள்ளிட்ட வெகுசில படங்களில் மட்டுமே நடித்தாலும், ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் என்கிற படத்தில் நடித்தபோது, நடிகர் பஹத் பாசிலுடன் காதல் உருவாகி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 2014ல் இருந்து படங்களில் நடிக்காமல் இருந்து ஒதுங்கியிருந்த நஸ்ரியா, கடந்த இரண்டு வருடங்களில் செலக்டிவாக சில படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார் நஸ்ரியா. மெண்டல் மதிலோ என்கிற ஹிட் படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் வரும் நவம்பர் 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.