நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
சூர்யாவின் திரையுலக பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் காக்க காக்க. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனனும் சூர்யாவும் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்தார்கள்.. ஆனால் அதன்பிறகு அடுத்ததாக அவர்கள் இணைந்து பணியாற்ற இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.. இந்தநிலையில் மீண்டும் கௌதம் மேனன் டைரக்சனில் நடிக்கிறார் சூர்யா. ஆனால் இது முழு நீள திரைப்படம் இல்லை..
நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாராகும் நவரசா என்'கிற ஆந்தாலஜி படமொன்றில் இடம் பெறுகின்ற குறும்படம் ஒன்றில் தான் கௌதம் மேனன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் சூர்யா. சமீபநாட்களாக சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் காட்சி அளிக்கிறார் அல்லவா..? இந்த தோற்றம் கௌதம் மேனனுக்கு ரொம்பவே பிடித்துப்போக, அதை சூர்யாவிடம் சொன்னதும் அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்