நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் திடீரென ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். பைரவி படத்தில் ரஜினி பாம்பை கையில் வைத்திருப்பது போன்று இந்த படத்தில் சிம்பு பாம்பை கையில் வைத்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதோடு படத்தின் படப்பிடிப்பின் போது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பாம்பை சிம்பு கையால் பிடித்து அதனை சாக்கு பைக்குள் போடுவது போன்ற வீடியோவும் வெளியானது.
இதை தொடர்ந்து வன ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்திய வன சட்டத்தை சிம்பு மீறி உள்ளார். பாம்பை சித்ரவதை செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிண்டி வனத்துறை அலுவலத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிம்பு, படத்தின் இயக்குன் சுசீந்திரன் ஆகியோருக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு என்று இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்தார்.
அப்படியென்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வனத்துறை கூறியது. ஆனால் வனத்துறை நிர்ணயித்த காலம் வரை சுசீந்திரன் ஆவணம் எதையும் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் வனத்துறை சிம்பு, மற்றும் சுசீந்திரனுக்கு 2வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உரிய காலத்திற்குள் ஆவணத்தை தாக்கல் செய்யாவிட்டால் வனபாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.