மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
' பத்ரி இயக்கத்தில், பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள, நாங்க ரொம்ப பிசி படம், முதல் முறையாக, தீபாவளி அன்று, நேரடியாக 'டிவி'யில் வெளியாகிறது. படம் குறித்து, பத்ரி அளித்த பேட்டி:தியேட்டரில் வெளியாவதை விட, படம் டிவியில் ஒளிபரப்பாவது மகிழ்ச்சியே. இதனால், முதல் நாளே, 4 முதல் 5 கோடி மக்கள், படத்தை பார்க்க உள்ளனர்.'மல்டி ஸ்டார்' படம் என்றாலே, நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால், பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகிபாபு என, அனைவரும், நட்புடன் இருந்ததால், எனக்கு இயக்குவது சுலபமாக இருந்தது. யோகிபாபு, இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.இவ்வாறு, அவர் கூறினார்.