Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 வருடங்களை நிறைவு செய்த மம்தா மோகன்தாஸ்

12 நவ, 2020 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Mamta-mohandas-completed-15years-in-cinema

சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். அதன்பிறகு குரு என் ஆளு, தடையற தாக்க என தமிழில் மொத்தம் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என கிட்டத்தட்ட 50 படங்கள் வரை நடித்து விட்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இதே நவம்பர் 11ஆம் தேதி தீபாவளி ரிலீசான வெளியான மயூரம் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம், பழசிராஜா புகழ் இயக்குனர் ஹரிஹரனால் அறிமுகப்படுத்தப்பட்டார் மம்தா மோகன்தாஸ்.. புற்றுநோய் பாதிப்பு, திருமண விவாகரத்து என இடையில் இரண்டு மிகப்பெரிய இக்கட்டான சோதனைகளை சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு, தற்போதும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

திரையுலகில் தனது 15 வருடங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.. குறிப்பாக, “கல்லூரி முடித்துவிட்டு ஜாலியாக சுற்றித்திரிந்த என்னிடம், என்ன நடிப்பை இயக்குனர் ஹரிஹரன் கண்டுபிடித்தார் என தெரியவில்லை, அவர் போட்டுக்கொடுத்த பாதையில் இத்தனை வருடங்களை கடந்து வந்துவிட்டேன். அதேபோல எனக்குள் இருந்த பாடும் திறமையை வெளிக்கொண்டு வந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ள மம்தா மோகன்தாஸ், இதுவரை கிட்டத்தட்ட 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதியுடன் இணைந்த இந்திரஜித்விஜய்சேதுபதியுடன் இணைந்த ... 6 வயதிலேயே கம்போஸரான ஜிப்ரான் மகன் 6 வயதிலேயே கம்போஸரான ஜிப்ரான் மகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in