இரண்டு வாரத்தில் எனிமி டீசர் | ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா | மண்டேலா படம் பார்த்து யோகி பாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் | பாகுபலியை ஆர்ஆர்ஆர் மறக்கடித்து விடும் : லண்டன் தணிக்கை குழு உறுப்பினர் பிரமிப்பு | ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார் | என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்! | ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன சிரஞ்சீவி படம் | வலிமைக்காக பஸ் ஒட்டிய அஜித் | புதையலை தேடி அலையும் யோகிபாபு | படப்பிடிப்பில் ‛அண்ணாத்த' ரஜினி : போட்டோ வைரல் |
மலையாள திரையுலகில் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் இந்திரஜித். முன்னணி நடிகர் பிரித்திவிராஜின் அண்ணனான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என விதவிதமான கதாபாத்திரங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர். தமிழில் பல வருடங்களுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளியான சர்வம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இன்னும் வெளிவராத நரகாசுரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது விஜய்சேதுபதி மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துவரும் அவரது இரண்டாவது 19 (1)(a) என்கிற படத்தில் இன்னொரு முக்கியமான வேடத்தில் இந்திரஜித்தும் இணைந்து நடிக்கிறார். தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, இந்திரஜித் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்து வி.எஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார்.