சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் கைவசம், கிட்டத்தட்ட ஆறேழு படங்கள் இருக்கின்றன. கடந்த வருடமே ஒப்புக்கொள்ளப்பட்ட படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கதைகேட்டு ஒப்புக்கொண்ட 'ஜனகனமன' என்கிற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு அதில் நடித்து வந்தார் பிரித்விராஜ். தேசிய விருது பெற்ற காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில் திடீரென பிரித்திவிராஜ் மற்றும் இயக்குனர் இருவருக்கும் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பே, கோவிட் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டாலும் மேலும் 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரித்விராஜ், தற்போது கோவித் தொடரிலிருந்து முழுதாக விடுபட்டுள்ளார். அதேபோல படத்தின் இயக்குனரும் தற்போது நன்கு குணமாகி உள்ளார். இதைத்தொடர்ந்து 'ஜனகனமன' படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.