மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தார் விஷால். இந்தப் படத்தில் அவர் மாறுகண் குறைபாடு கொண்டவராக நடித்தார். அப்போது செயற்கையாக கண்ணை மாறுகண்ணாக மாற்றி நடித்தார். இயற்கைக்கு மாறாக கண்ணை அவர் சுழற்றி நடித்ததால் அவன் இவன் படப்பிடிப்பின் போதே விஷாலுக்கு கண்வலி பிரச்சினை உருவானது. என்றாலும் பாலா படம் என்பதால் சகித்துக் கொண்டு நடித்தார். இந்த படத்தில் விஷாலின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் வெற்றி பெறவில்லை.
அவன் இவன் படத்தில் நடித்ததில் இருந்தே விஷாலுக்கு தொடர்ந்து கண்வலி பிரச்சினை இருந்து வந்தது. இப்போது அது அதிகரித்திருக்கிறது. துப்பறிவாளன் 2 படத்திற்காக அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நவீன கண் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் ஓரளவு குணமாகி இருந்த கண்வலி இப்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது.
ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது விஷால் கண்வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் அவர் 4 நாட்கள் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐதராபாத்தில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். கண்வலி குறைந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். 4 நாட்கள் படப்பிடிப்பு தடையால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக தயாரிப்பாருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி இருக்கிறார் விஷால்.