ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ராஜேந்தர், செயற்குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி, நேற்று அளித்த பேட்டி:இது கொரோனா காலம்; காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். நான் ஓட்டு கேட்க நேராக போகவில்லை. நேரில் வந்து கேட்கும் ஓட்டை விட, அவர்களின் உயிர் முக்கியம். தமிழகத்தில், சினிமாவுக்கு இரட்டை வரி போடுகின்றனர். எந்த சங்கமும் கேட்கவில்லை. நான் தான் கேட்டேன். ஹாலிவுட் படங்களோடு இந்திய சினிமாவை ஒப்பிடாதீர். சங்க தேர்தல் முடிந்ததும், பெரிய மாற்றங்கள் வரும். அதன் பின், வளர்ச்சி மட்டுமே. வி.பி.எப்., கட்டணமே இருக்காது. சிறு படத் தயாரிப்பாளர்கள், அதிகபட்சம், 1,000 தொழிலாளர்களை வாழ வைக்கின்றனர். சிறு படத் தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.