சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பொதுவாக டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலியாக பல கணக்குகளை துவங்கி பல தவறான செய்திகளை வெளியிட்டு, அதன்மூலம் குழப்பம் ஏற்படுத்துவதை சில விஷமிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். பல நேரங்களில் அப்படிப்பட்ட போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்படுகின்றன. ஆனால் இதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மலையாள நடிகர் பிரித்விராஜின், 6 வயதே ஆன மகள் அலங்க்ரிதாவின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக யாரோ ஒருவர் கணக்கு துவங்கியுள்ளார். மேலும் அதுகுறித்த விபர பக்கத்தில், இந்த பக்கத்தை பராமரிப்பவர்கள் என்று பிரித்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா மேனன் இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எந்த பதிவுகளும் இடப்படாத இந்த கணக்கில் சுமார் 1,000 பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இது, பிரித்விராஜின் கவனத்திற்கு செல்லவே, இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரித்விராஜ், “இது போலியான கணக்கு.. இதை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்.. ஆறு வயது குழந்தையின் பெயரில் கூட போலியாக கணக்கு துவங்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து யோசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்களா..?” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளதுடன், போலிக்கணக்கு துவங்கியவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் பிரித்விராஜ்