Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது தவறா? வேல்முருகன் ஆவேசம்

11 நவ, 2020 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Hugging-Sanam-issue---Velmurugan-strong-reply

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் வேல்முருகன் இருவாரங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேறினார். நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டில் இன்னொரு போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் வேல்முருகனை கிண்டல் செய்தும், விமர்சித்தும் இணையதளத்தில் எழுதினார்கள்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கும் வேல்முருகன் இதுபற்றி கூறியிருப்பதாவது: பிக்பாஸ் வீட்டில் நடிகை சனம் ஷெட்டியை நான் கட்டிப்பிடித்ததை சர்ச்சையாக்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது. இருவரும் போட்டியொன்றில் பங்கேற்றபோது மற்றவர்கள் நாங்கள் வெற்றிபெற மாட்டோம் என்று கருதினர். அதையும் மீறி ஜெயித்த மகிழ்ச்சியில் அவரை கட்டிப்பிடித்தேன். தவறான எண்ணம் ஏதும் இல்லை.

நாங்கள் இருவரும் சகோதர, சகோதரியாகவே பழகினோம். அந்த போட்டிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, நான் யாரையும் கட்டிப்பிடித்தது இல்லை. நான் கிராமத்தில் இருந்து வந்தவன். வெள்ளந்தி மனது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடிக்கிறார்கள். சினேகன் கட்டிப்பிடித்ததையும் நான் கட்டிப்பிடித்ததையும் மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. மற்றவர்கள் இதை செய்தால் கண்டுகொள்வது இல்லை. நாங்களும் மனிதர்கள் தான்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
"இரண்டாம் குத்து" டீசருக்கு ஐகோர்ட் குத்து"இரண்டாம் குத்து" டீசருக்கு ... தூய்மை பணியாளரை நெகிழ வைத்த கனிகா தூய்மை பணியாளரை நெகிழ வைத்த கனிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
13 நவ, 2020 - 09:50 Report Abuse
 Muruga Vel வேல்நா பயம் இருக்காதா
Rate this:
Bala Subramanian - Bangalore,இந்தியா
12 நவ, 2020 - 14:09 Report Abuse
Bala Subramanian நகரத்தில் இருப்பவர்களுக்கு சின்ன வயதில் இருந்தே பெண்களுடன் நட்பாக பழகுவதால் தொட்டு பேசுவது என்பெதெல்லாம் சகஜம் ஆணும் ஆணும் பழகுவது போலத்த்தான் ஆனால் நாட்டுப்புறத்தான் பெண்ணை பெண்ணாகத்தான் பார்க்கிறான் அப்பிடியே பழகி இருப்பதனால் அதானால் அவன் கட்டி பிடிக்கும்பொழுது அந்த உணர்ச்சியில்தான் கட்டி பிடிப்பான் அதுதான் வித்யாசம் செய்யும் செயலில் அல்ல நினைப்பில்தான் இருக்கிறது
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
12 நவ, 2020 - 12:36 Report Abuse
Shekar சான்ஸ் கிடைச்சா விடலாமா, விடப்பா மத்தவனுக்கு எரிச்சல், அது சரி உங்கள் கிராமத்தில் இதெல்லாம் சகஜமா. தமிழ் பண்பாடு என்பார்களே அது இதுதானா? மய்ய தலைவர் அல்லவா நடத்துகிறார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in