மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
காமெடி நடிர் சூரி தனக்கு நிலம் வாங்கிக் கொடுத்த வகையில் வீரதீரசூரன் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான அன்புவேலனும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் மற்றுமொரு தயாரிப்பாளருமான ரமேஷ் குடவாலா ஆகியோர் 2.7 கோடியை மோசடி செய்து விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என்று அன்புவேல் ராஜனும், ரமேஷ் குடவாலாவும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதில் அன்பு செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், மோசடி பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் ரமேஷ் குடவாலா தனது முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்று விட்டார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
தந்தை முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றது ஏன் என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முன்ஜாமீன் மனுவை எனது அப்பா திரும்பப் பெற்றுக் கொண்டார். சூரி மற்றும் தயாரிப்பாளர் அன்புவேலனுக்கு இடையே நடந்த நில ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை, தமிழக முதல்வர் மற்றும் தமிழகக் காவல்துறை ஆகியவற்றின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீதி நிலைநாட்டப்படும்.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.