Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிஸ்கோத் - சந்தானத்துக்கு ஒரு இம்சை அரசன்: இயக்குனர் கண்ணன்

11 நவ, 2020 - 14:17 IST
எழுத்தின் அளவு:
Director-Kannan-about-Biscoth-movie

இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கி இருக்கும் படம் பிஸ்கோத். சந்தானம், அலிஷா பெரி, ஸ்வாதி முப்பாலா, சவுகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிவசங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரதன் இசை அமைத்துள்ளார், சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது: படத்தில் ஒரு பிஸ்கட் பேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது.அதனால் தான் படத்துக்குப் பிஸ்கோத் என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தி இருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசன் அமைந்ததோ, அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத் படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும். 18ம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்கு தேவையான அரங்கங்களும் அமைக்கப்பட்டன.

இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும். மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல் படம் முதல் காட்சி : நினைவு கூர்ந்த ரமேஷ் அரவிந்த்முதல் படம் முதல் காட்சி : நினைவு ... முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றது ஏன்? விஷ்ணு விஷால் விளக்கம் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றது ஏன்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
12 நவ, 2020 - 02:31 Report Abuse
Aanandh அடுத்த இம்சை. இந்த சந்தானமெல்லாம் ஏன் இன்னும் நடிப்பு என்ற பெயரில் மக்களை தொல்லை மேல் தொல்லை தந்து உயி ரை வாங்குறானோ தெரியலை. இந்தப்படத்தோடு இவன் ஒழிந்தால் தான் நிம்மதி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in