நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
'க்ரீன் இந்தியா சேலஞ்ச்' என்ற மரக்கன்றுகளை நடும் சவாலை தெலுங்குத் திரையுலகத்தில் பல நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அப்படி மரக்கன்றை நட்டு, தமிழ் நடிகர் விஜய்யை மரக்கன்று நடுமாறு 'நாமினேட்' செய்தார். அதை ஏற்று விஜய்யும் மரக்கன்றை நட்டார்.
இந்த மரக்கன்று நடும் சவாலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மரக்கன்றுகளை நட்டுவிட்டு, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கையும் நாமினேட் செய்திருந்தார். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த சவாலை ஏற்ற ரகுல் ப்ரீத் சிங் இன்று மூன்று மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
“தாமதம் தான், ஆனாலும் கடைசியாக ஏற்றுக் கொண்டேன். என்னை நாமினேட் செய்த நாக சைதன்யாவுக்கு நன்றி. நான் மூன்று மரக்கன்றுகளை நட்டேன். அடுத்து நான் நடிகர்களை நாமினேட் செய்யவில்லை, ஆனாலும் எனது அனைத்து ரசிகர்களையும் தலா மூன்று மரக்கன்றுகளை நட்டு இதைத் தொடரச்சியாக்க கேட்டுக் கொள்கிறேன். இந்த பூமியை பசுமையாக வைத்துக் கொள்வது நமது அனைவரின் பொறுப்பு,” என்று கேட்டுக் கொண்டுள்ளார் ரகுல்.