மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிவித்தார். அத்துடன் தன்னுடன் கடந்த சில தினங்களாக இருந்தவர்களும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கடந்த வாரம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சிரஞ்சீவி, நாகார்ஜுனா இருவரும் ஒன்றாக சந்தித்து வெள்ள நிவாரண நிதியை வழங்கினார்கள். சிரஞ்சீவியுடன் சேர்ந்து சென்றதால் நாகார்ஜுனாவும் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டாராம். ஆனால், அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
நாகார்ஜுனா அவருடைய 'வைல்டு டாக்' சினிமா படப்பிடிப்பு மற்றும் 'பிக் பாஸ்' படப்பிடிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளாராம்.