சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
நயன்தாராவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி, தனது நண்பர் சரவணன் உடன் இணைந்து இயக்கி, நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' படம் நவ., 14ல் ஓடிடியில் வெளியாகிறது. சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பாலாஜியிடம் ஒருவர், ரஜினி பற்றி கேட்டார்.
அதற்கு அவர், ''நான் ரஜினியின் ரசிகன். அவர் நல்ல மனிதர் என்று நான் சிறு வயதாக இருக்கும்போது என் தாத்தா சொல்லியிருக்கிறார். அது அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. அவரின் தளபதி முதல் தர்பார் வரை பல நினைவுகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் அவரின் அரசியல் வருகை குறித்து ஒரு பேட்டி கொடுத்தேன். நான் அப்படி அப்படி பேசியிருக்க கூடாது என பின்பு வருந்தினேன். அவருக்கு எல்லா சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்'' என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் அரசியல் வருகை தொடர்பான ஒரு பேட்டியில் அதை கிண்டலடித்து பேசியிருந்தார் பாலாஜி.