பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான பாலகிருஷ்ணா அடுத்து பொயப்பட்டி சீனு இயக்கும் படத்தில் நடிக்கிறார். தமிழில் 'வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான்' படங்களில் நடித்த சாயிஷா ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
2015ல் வெளிவந்த 'அகில்' தெலுங்குப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சாயிஷா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த வருடம் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தமிழில் கணவர் ஆர்யாவுடன் 'டெடி' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'யுவரத்னா' என்ற கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடித்து வருகிறார்.
பாலகிருஷ்ணா படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், படத்தில் இணைந்துள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.