Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூக்குத்தி அம்மன் கதை தெரியுமா?

10 நவ, 2020 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-Amman-story-out

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் நவ.,14ந் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதனை ஆர்.ஜே.பாலாஜியும் அவரது நண்பர் சரவணனும் இணைந்து இயக்கி உள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான்.

நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பம் ஆர்.ஜே.பாலாஜியினுடையது. அப்பா மவுலி, அம்மா ஊர்வசி, தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் கொஞ்சம் கஷ்டமாக வாழ்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. இப்படி பல பிரச்சினைகள் அந்த குடும்பத்தில்.

ஆர்ஜே.பாலாஜியின் குல தெய்வம் மூக்குத்தி அம்மன். எந்த பிரச்சினை என்றாலும் மூக்குத்தி அம்மனிடம்தான் முறையிடுவார்கள். ஆளாளுக்கு மூக்குத்தி அம்மனை அடிக்கடி வேண்டுதல் கேட்டு தொல்லை செய்ய, அந்த மூக்குத்தி அம்மனே(நயன்தாரா) நேரில் வந்து விடுகிறார். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். அதாவது மாய மந்திரம் எதுவும் செய்யாமல் வாழ்க்கையை அவர்களுக்கு புரிய வைக்கிறார்.

இதனால் ஆர்ஜே.பாலாஜியும், மூக்குத்தி அம்மனும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த நேரத்தில் நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்தி அமைதியை குலைக்க ஒரு போலி சாமியார் புறப்பட்டு வருகிறார். அவரை ஆர்ஜே.பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் எப்படி விரட்டி அடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புது படங்களை திரையிடாவிட்டால், தியேட்டரை திறக்க மாட்டோம்: மல்லுக்கட்டும் உரிமையாளர்கள்புது படங்களை திரையிடாவிட்டால், ... விபிஎப் பிரச்சினைகளை மீறி 3 படங்கள் ரிலீஸ் விபிஎப் பிரச்சினைகளை மீறி 3 படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

THENNAVAN - CHENNAI,இந்தியா
11 நவ, 2020 - 12:06 Report Abuse
THENNAVAN balaji why u this girl for devosion film
Rate this:
N.G.RAMAN - MADURAI,இந்தியா
11 நவ, 2020 - 10:48 Report Abuse
N.G.RAMAN இந்த படத்தின் ட்ரைலர் பழைய தமிழ்ப்படமான ருத்ர தாண்டவம் திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. இதில் வி கே ராமசாமி சிவனாகவும் நாகேஷ் பக்தராகவும் நடித்திருப்பர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in