Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது படங்களை திரையிடாவிட்டால், தியேட்டரை திறக்க மாட்டோம்: மல்லுக்கட்டும் உரிமையாளர்கள்

10 நவ, 2020 - 14:18 IST
எழுத்தின் அளவு:
We-will-never-open-theatres-until-new-film-release-says-Thirupur-Subramaniyam

கொரோனா பரவல் பிரச்சினை காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. சில தியேட்டர்கள் திறக்கப்படவும் இல்லை. தியேட்டர்களில் படங்களை திரையிடும் விபிஎப் கட்டணத்தை இனி நாங்கள் கட்ட மாட்டோம், தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். நாங்கள் கட்ட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

தியேட்டர்கள் திறக்கும் நேரத்தில் இந்த பிரச்சினை வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதை தொடர்ந்து தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் விபிஎப் கட்டணத்தை கட்ட ஒப்புக் கொள்கிற வரை புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்து விட்டனர்.

புதிய படங்களை திரையிடாவிட்டால் நாங்களும் தியேட்டர்களை திறக்க மாட்டோம் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுக்கவே தயாரிப்பாளர்கள் தான் விபிஎப் கட்டணத்தை கட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரச்சினை செய்கிறார்கள். ஹாலிவுட் படங்கள் 50 சதவிகித பங்கு தருவதால் நாங்கள் விபிஎப் கட்டணத்தை கட்டுகிறோம். தமிழ் தயாரிப்பாளர்களும் அப்படி தந்தால் நாங்களே கட்டிக் கொள்கிறோம். ஆனால் முன் பணம் பெற்றுக் கொண்டு தான் படத்தை தருகிறார்கள்.

4 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது வருத்தமாக இருக்கிறது. விபிஎப் நிறுவனங்களுடன் பேசி 60 சதவிகித கட்டண சலுகை வரை வாங்கிக் கொடுத்தும் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எந்த சூழ்நிலையிலும் எங்களால் விபிஎப் கட்டணத்தை கட்ட முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

புதிய படங்களை திரையிடப்போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். புதிய படங்கள் வெளியாகும் வரை நாங்களும் தியேட்டரை திறக்கப்போவதில்லை. பழைய படங்களை வைத்து தியேட்டரை திறக்கிறவர்கள் திறந்து கொள்ளலாம். 8 மாதத்திற்கு பிறகு தியேட்டரை திறக்க அரசு அனுமதி அளித்தும் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறையா? பணமா?: சூரியிடம் நீதிமன்றம் கேள்விசிறையா? பணமா?: சூரியிடம் நீதிமன்றம் ... மூக்குத்தி அம்மன் கதை தெரியுமா? மூக்குத்தி அம்மன் கதை தெரியுமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in