Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் நிழல்" - பார்த்திபனின் புதிய முயற்சி

10 நவ, 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Parthiban-to-make-movie-in-single-short

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய பார்த்திபன், “முப்பது வருடங்களுக்கும் மேல் என் முதல் படம் துவங்கி இப்போதும் அடுத்த படம் வரையிலும் கூட பத்திரிக்கையாளர்களின் கருத்துக்களும், பாராட்டுக்களையும் எப்போதும் எதிர்பார்ப்பவன் நான். வெகுஜன மக்களின் விமர்சனங்களை காட்டிலும் பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருப்பவன் நான். ஏனெனில் பத்திரிக்கையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் என் அப்பாவும் அம்மாவும் எனக்கு கொடுக்கும் பாராட்டு போன்றது.

எனது அடுத்த படம் முழுமையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம். இப்படத்திற்கு இரவின் நிழல் என்று பெயர் . இதற்கு முன்பும் நிறைய சிங்கிள் ஷாட் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இந்த படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்திற்கான முதலமைச்சர் சந்திப்பு கூட இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ரயில் டிக்கெட் துவங்கி அனைத்து செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். அதைப்போல் சினிமாவிலும் இம்மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் எடுக்கும் கலைஞர்களை படம் எடுத்த பின் ஒரு கேடயம் கொடுத்து பாராட்டுவதற்கு பதிலாக எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்கலாம் என்னும் திட்டத்திற்காக முதலமைச்சரை சந்திக்க இருந்தேன்.

சமீபத்தில் ஓடிபி என்னும் ஒரு வெடி பிரபலமாகி வருகிறது. அதாவது திரியைப் பற்ற வைத்தவுடன் நம் மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அந்த அளவிற்கு இன்று டிஜிட்டல் மயம் எங்கும் எதிலும் அதிகரித்துவிட்டது.

என்னைப் பொருத்தவரை எப்போதும் நான் வாடகை வீட்டில் இருக்கும் ஒரு இயக்குனர் தான். அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை காரணம் நான் இப்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இவர் ஒரு பெரிய ஓய்வு பெற்ற இயக்குனர் இந்த தெருவே அவருடையது தான் நிறைய பங்களாக்கள் வாங்கிப் போட்டிருக்கிறார் என்னும் பெயரை விட இப்போதும் அவர் படம் செய்து கொண்டிருக்கிறார் என்னும் வார்த்தைதான் எனக்கு வேண்டும். இப்போதும் நான் தடையின்றி படம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அது பத்திரிக்கையாளர்கள் கொடுக்கும் உற்சாகமும் உத்வேகமும் மட்டுமே அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரயாகா மார்ட்டினுக்கு பதிலாக பிரக்யா ஜெய்ஸ்வால்பிரயாகா மார்ட்டினுக்கு பதிலாக ... ஆபாசப் படத்தை வரவேற்கத் தயாராகும் தியேட்டர்காரர்கள் ஆபாசப் படத்தை வரவேற்கத் தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in