மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் சினிமாவில் சம்பாதிக்க முடியாத அளவிற்கு ரசிகர்களை சம்பாதித்தவர் இந்த நடிகை. ஆனால் அதை அவர் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை என்பது அடுத்தடுத்து அவர் தேர்வு செய்த படங்கள் மூலமே உறுதியானது.
தற்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் நடிகையின் கைவசம் இல்லை. ஆனாலும் நடிகையின் ரசிகர் வட்டமும் குறையவில்லை. இது முன்னணி நடிகைகளையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்நிலையில் விரல் நடிகர் பற்றி தேவையில்லாமல் கருத்துச் சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை. ஊரெல்லாம் அந்த நடிகர் பற்றிய பேச்சாக உள்ள நிலையில், நடிகையின் பதில் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளதாம்.
பெரிய முதலாளி வீட்டில் இருந்த போது, அந்த நடிகரின் ஆதரவினாலேயே நடிகைக்கு ரசிகர்கள் மேலும் அதிகமாகினர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு, நடிகருடன் நல்ல நட்பிலேயே உள்ளார். அப்படி உள்ள நிலையில் வெளிப்படையா பேசுகிறேன் என நடிகர் பற்றி அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.