சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் என்பவர் தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் விதத்தில் வார்த்தைகளைச் சொல்லி பேசி வருகிறார்.
கடந்த வாரம் சக போட்டியாளரான சனம் ஷெட்டியை 'தறுதலை' என்ற வார்த்தையைச் சொல்லித் திட்டி சண்டை போட்டார். ஒரு பெண்ணை இப்படி அவமரியாதையுடன் பேசிய பாலாஜியின் நடவடிக்கை பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக அவர் 'ரெட் கார்டு' கொடுத்து நிகழ்ச்சியை விட்டே வெளியேற்றப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும், கமல்ஹாசன் வரும் வார இறுதி நிகழ்ச்சியில் இதைக் கண்டித்து பாலாஜியை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுவார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், பாலாஜிக்கு வெறும் ஆலோசனை மட்டுமே சொல்லிவிட்டு அந்த விவகாரத்தை முடித்து வைத்தார் கமல். அது பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சீசனில் எப்போதோ நடந்த ஒரு பெண் அவமதிப்பு விவகாரத்தைப் பேசிய சரவணன், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு ஒரு நியாயம், இப்போது நேரடியாக அவமதித்த பாலாஜிக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இனி வரும் நாட்களில் பாலாஜி இப்படி பெண்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொண்டால் அவரை உடனடியாக நிகழ்ச்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகி உள்ளது.