காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள் | மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் பெரும்பான்மைப் பகுதி காட்டில் படமாக உள்ளதால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள்.
நாளை முதல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள மரேதுமில்லி காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதற்காக அல்லு அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் அருகில் உள்ள ராஜமுந்திரி நகருக்கு வந்து ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அவர்களை சில நாட்களாக தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டார்களாம்.
தொடர்ந்து ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இப்படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியது என்கிறார்கள். படத்தில் தமிழர்களை அவதூறாகச் சித்தரிக்கவும் வாய்ப்புள்ளது என்று தான் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார் என்ற ஒரு தகவலும் உள்ளது. படம் வெளிவரும் போது சர்ச்சைகளை உருவாக்கலாம்.