Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு படங்கள் வருமா, வராதா ?

09 நவ, 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Did-new-movies-will-release-on-Diwali

2020ம் ஆண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு மோசமான ஆண்டுதான். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு தொழில்கள் முடங்கின. ஆனால், தளர்வுகள் விதிக்கப்பட்ட பொழுது பல தொழில்கள் மீண்டும் ஆரம்பமாகின. இருப்பினும் தியேட்டர்கள் திறப்புக்கான தளர்வுகள் கிடைக்க மிகுந்த தாமதம் ஆகியது.

தமிழ்நாட்டில் நாளை(நவ., 9) முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனாலும், விபிஎப் கட்டண விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக புதிய படங்கள் வருமா, வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் ஆரம்பமான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிடுமா என்று திரையுலகத்திலேயே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாளை எந்தப் புதிய படமும் வெளியாகாத சூழ்நிலையில் தியேட்டர்களில் மார்ச் மாதத்திற்கு முன்பாக வெளியான படங்களை மீண்டும் திரையிட உள்ளார்கள்.

தீபாவளி வர இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் பேச்சு வார்த்தை முடிந்தாலும் அதற்குள் புதிய படங்களை வெளியிட முடியுமா என்பதும் சந்தேகம்தான். அப்படி நடக்கவில்லை என்றால் முதல் முறையாக புதிய படங்கள் இல்லாத தீபாவளி வருடமாக இந்த வருடம் அமையும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கதாநாயகி சார்ந்த படங்கள் : கீர்த்தி சுரேஷ் புது முடிவுகதாநாயகி சார்ந்த படங்கள் : கீர்த்தி ... கோதாவரி காடுகளில் நாளை முதல் 'புஷ்பா' படப்பிடிப்பு கோதாவரி காடுகளில் நாளை முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

chris -  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2020 - 16:02 Report Abuse
chris roomba nalladu.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in