'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'சரக்குவாரி பாட்டா, ரங்தே, குட்லக் சகி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த கொரானோ காலத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ்ப படமான 'பெண்குயின்', தெலுங்குப் படமான 'மிஸ் இந்தியா' ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகின. ஆனால், இரண்டு படங்களுக்குமே எதிர்பார்த்த வரவேற்பும், விமர்சனங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து இனி கதாநாயகி சார்ந்த படங்களில் நடிப்பதில்லை என கீர்த்தி முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி தனி கதாநாயகியாக நடித்துள்ள 'குட்லக் சகி' படம் கூட ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தெரிகிறது. கதாநாயகி சார்ந்த படங்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க பல புதிய வாய்ப்புகள் வருவதால் அதிலேயே கவனம் செலுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளாராம்.