Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - கோகுலத்தில் சீதை

09 நவ, 2020 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Gokulathil-seethai

படம் : கோகுலத்தில் சீதை
வெளியான ஆண்டு : 1996
நடிகர்கள் : கார்த்திக், சுவலட்சுமி, கரண்
இயக்கம் : அகத்தியன்
தயாரிப்பு : லட்சுமி மூவி மேக்கர்ஸ்

காதல் கோட்டை வெற்றிக்கு பின், அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த தரமான படம், கோகுலத்தில் சீதை. படத்தின் தலைப்பே, படத்தின் கதையை சொல்லும். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருந்தார், அகத்தியன். வாய்ப்பு இருந்தும் இரட்டை அர்த்த வசனம், ஆபாசம், வன்முறை எதையும், இப்படத்தில் சேர்க்கவில்லை.

பெண் பித்தனான ரிஷியின் வாழ்க்கையில் வருகிறாள், நிலா. அவளை, ரிஷி விரும்புகிறார். ஆனால் நிலா, தன் நண்பனின் காதலி என தெரிந்ததும், அவளுடன் நட்பு பாராட்டுகிறான். இந்நிலையில், சந்தப்பவசத்தால், ரிஷி வீட்டில் அடைக்கலமாகிறாள் நிலா. ரிஷியின் நல்ல குணங்களை மெல்ல உணர்கிறாள், நிலா. முடிவு என்ன என்பதை, தெளிவான திரைக்கதை வழியாக கூறியிருந்தார், அகத்தியன்.

ரிஷியாக, கார்த்திக். அவரை ஏன் நவரச நாயகன் என்கின்றனர் என்ற கேள்விக்கான விடையை இப்படத்தில் தெரிந்து கொள்ளலாம். மனிதர், இயல்பான நடிப்பால் பின்னியிருப்பார். நிலா கதாபாத்திரத்தில், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது, தேவயானி. பின், சுவலட்சுமி ஒப்பந்தமானார்.

தேவாவின் இசையில், கோகுலத்தில் கண்ணா, நிலாவே வா, எந்தன் குரல் கேட்டு, அந்திமந்தாரை, சொர்க்கம் மதுவில்... போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றன.

பெண்ணை உயர்வாக சித்தரித்த விதத்தில், தமிழக அரசின் விருதை, இப்படம் பெற்றது. இப்படம் தெலுங்கில், கோகுலம்லோ சீதா; கன்னடத்தில், கிருஷ்ண லீலா என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில், ஹம் ஹோ கயே ஆப்கே என்ற பெயரில், அகத்தியனே, ரீமேக் செய்திருந்தார்.

கோகுலத்தில் சீதை போற்றத்தக்கவள்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - காதல் கோட்டைமறக்க முடியுமா? - காதல் கோட்டை மறக்க முடியுமா? - அவ்வை சண்முகி மறக்க முடியுமா? - அவ்வை சண்முகி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in