மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகர் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்த, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், இப்போது அரசியலுக்கு வர வேண்டாம்; ஆனால், நான் கட்சி ஆரம்பிப்பதை, அவர் தடுக்க வேண்டாம், என கூறினார்.
அவர் அளித்த பேட்டி: விஜய்யின் உண்மை ரசிகர்களுக்காக, கட்சி ஆரம்பிக்க, இதுவே சரியான தருணம். விஜய் வருவார் என நம்பி, நான் இதை ஆரம்பிக்கவில்லை. 25 ஆண்டுகளாக, விஜய்க்காக சொந்த பணத்தை செலவு செய்து உழைத்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்.
மகனா, புருஷனா என, பார்க்கும் ஷோபாவின் நிலை கஷ்டம் தான். நான் கேட்டபோது, கையெழுத்து போட்டார். மகன் கேட்கும் போது, வாபஸ் வாங்கியுள்ளார். அவர் படிக்காமல், எதிலும் கை யெழுத்து போட மாட்டார். அரசியல் ஆர்வம் என் மனைவி ஷோபா சொன்னது உண்மை அல்ல. அவரை பிரச்னைக்குள் இழுக்க வேண்டாம். இருவரின் உறவில் விரிசல் இல்லை.
பொதுக் கருத்துகள் பேசும்போது, என் நிலையை, நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்; அவரும் அப்படித் தான். நான் அரசியல் ஆர்வம் உள்ளவன். மக்கள் மீதுள்ள ஆர்வத்தை, படங்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளேன். விஜய் விடுத்த அறிக்கையே, நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீ சம்பந்தமில்லை எனக் கூறு என, 10 ஆண்டுகளுக்கு முன், நான் சொல்லிக் கொடுத்தது தான். அப்போது சொன்ன அறிக்கை, இப்போது வருகிறது. இது, நான் எதிர்பார்த்தது தான். சில வார்த்தைகள் கடினமானவை; அவ்வளவு தான்.
விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கியவன், நான். அதை, ஒவ்வொரு கட்டமாக வளர்த்து வந்தவன், நான். ரசிகர்கள் எது நல்லது என நினைக்கின்றனரோ, அதை செய்யட்டும். விஜய் ரசிகர்களை பொறுத்தவரை, விஜய் வேறு; நான் வேறு அல்ல. அவரை இந்த இடத்திற்கு அழைத்து வர பட்டபாடு, எனக்கு தெரியும். இந்த இடைபட்ட காலத்தில், இருவருக்கும் தனிப்பாதை உருவாகி விட்டது. அவரை சுற்றி, சிலர் சூழ்ந்துள்ளனர். ஒரு கூட்டம், எங்களை பிரிக்க, தீயாக வேலை செய்கிறது.
நான் இயக்கத்தின் பொறுப்பாளராக, ஆனந்த் என்பவரை நியமித்தேன். அவர் தான், விஜய்யை தவறான வலையில் சிக்க வைக்கிறார். 37 மாவட்டங்களுக்கு, 200 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்த, 200 மாவட்ட தலைவர்களுக்கும், இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. இதில், 150 பேர், ஆன்லைனில் விஷயமறிந்தவர்கள். அவர்களை அழைத்து வந்து, விஜய் உடன் நிற்க வைத்து, போட்டோ எடுக்கின்றனர்.
அதன்பின், டுவிட்டர் கணக்கை வைத்து, சில பொய்யை உண்மையாக்குகின்றனர். ஆனந்த், சரவணன், பிரசாந்த் உள்ளிட்ட மூவரை மீறி, ஒரு செய்தி கூட வெளியே வராது. ஒரு பொய்யை, திரும்ப திரும்ப சொல்லும் போது உண்மையாகிறது. விஜய்யை சுற்றி, ஆன்லைன் அரசியல் நடக்கிறது. அவருக்கு அது புரியவில்லை. இரும்புக் கோட்டைக்குள் சிக்கி இருக்கிறார். டுவிட்டரில் வரும் செய்திகளை, உண்மை என, நம்பி உள்ளார்.
விஜய் மாதிரி, ஒரு பிள்ளையும், என்னை போன்ற, ஒரு தந்தையும் கிடைக்க மாட்டார்கள். இது, அனைவருக்கும் தெரியும். நானே உருவாக்கிய ஒருவர் மீது, நானே புகார் தெரிவிக்க விரும்பவில்லை. இப்போது, நான் வெளிப்படையாக கூறுவது, விஜய்யின் நலனுக்காகவே. அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உண்மையான விசுவாசிகள் வெளியே சென்று விட்டனர். பொய்யானவர்கள், இயக்கத்தில் உள்ளனர். இது, விஜய்க்கு தெரியவில்லை. அரசியல் ஆசையை, விஜய்க்கு நான் ஊட்டி விடவில்லை. அப்படி பொய்யை பரப்பி உள்ளனர்.
துப்பாக்கி படத்தோடு சரி; விஜய் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும், அவருடன் நான் பேசுவதில்லை. உடல்நலன் குறித்து மட்டுமே பேசுவேன். விஜய், இப்போது அரசியலுக்கு வர வேண்டாம் என்கிறேன். ஆனால், நான் வருகிறேன்; என்னை தடுக்க வேண்டாம்.என் மேல், விஜய் நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். அவர் எடுக்க மாட்டார். அவர் என் பிள்ளை. கட்சியின் நோக்கம், இலக்கு போன்றவற்றை, இப்போது கூற முடியாது. இவ்வாறு, எஸ்.ஏ.சந்திர சேகர் கூறினார்.