Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்யா ஒரு பச்சோந்தி.. பாலாஜியின் தந்திரம் இது தான்: வேல் முருகன் ஓப்பன் டாக்

08 நவ, 2020 - 18:59 IST
எழுத்தின் அளவு:
Velmurugan-about-Ramya-and-Balaji-in-Biggboss

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போட்டியாளர்கள் எப்போது வாய் திறப்பார்கள் என்ற ஆர்வம் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். காரணம் பிக் பாஸ் வீட்டில் 24 மணி நேரம் நடக்கும் சம்பவங்களைச் சுருக்கமாக மட்டுமே டிவியிலும், ஹாட் ஸ்டாரிலும் வெளியிடுகின்றனர். எனவே சக போட்டியாளர்கள் பற்றியும், அவர்களது நிஜ முகங்கள் பற்றியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பேசுவதை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

அந்தவகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபல பாடகர் வேல்முருகன், தனது அனுபவங்களை ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் ரம்யா தான் பச்சோந்தி என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் 4 டைட்டில் வின்னராக ரம்யா தான் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் வேல்முருகனின் இந்த பதில் அவர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வேல்முருகன் இருந்தபோது, பாலாஜியுடன் தான் அவருக்கு பெரும்பாலும் மோதல் ஏற்பட்டது. எனவே அவர் பற்றிய கேள்விக்கு, “நீங்கள் யாரிடமும் ஒட்ட மாட்டேன் என்கிறீர்கள், நெருக்கமாக பழக மாட்டேன் என்கிறீர்கள், அதனால் உங்களுக்கு தான் நஷ்டம்' என என்னிடம் பாலாஜி ஒருநாள் கூறினார். அது ஏன் எனக் கேட்டேன். அதற்கு அவர் இப்போது ஆஜித்துடன் நான் நெருக்கமாக பழகி வருகிறேன். அவன் ஏதாவது தவறு செய்தால் அந்த தவறை நான் சுட்டிக் காட்ட மாட்டேன். ஆனால் என்னுடன் நெருக்கமாக பழகவில்லை. அதனால் நீங்கள் சின்ன தவறு செய்தாலும் அதை பெரிதாக சுட்டிக் காட்டுவேன் என்று கூறினார்.

சக போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்களை கோபமடையச் செய்து வெளியேற்ற வேண்டும் என்ற தந்திரத்தை தான் பாலாஜி கடைபிடித்து வருகிறார். இது சரியான விளையாட்டு அல்ல. நான் கிராமத்தை சேர்ந்தவன் என்பதால் என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. பாலாஜியுடன் ஏதாவது பேசி அது பிரச்சனையாகி அடிதடியாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன்' என வேல்முருகன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
என் சுயசரிதையில் நடிக்க மகேஷ்பாபு பொருத்தமானவர் : விவிஎஸ் லக்ஷ்மன்என் சுயசரிதையில் நடிக்க மகேஷ்பாபு ... ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு தந்த சர்ப்பிரைஸ் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 நவ, 2020 - 22:42 Report Abuse
Ranjit Kumar அங்க பேசுறதுக்கு துப்பு இல்ல. இப்ப open talk. Wasted
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09 நவ, 2020 - 09:55Report Abuse
 Muruga Velபேசறதுக்கா .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in