துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? |
நடிகர் கமல்ஹாசன், 4வது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று(நவ., 7) அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க வாழ்த்து மழையாக இருந்தது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலை வாழ்த்தினார். தெலுங்கு போட்டியாளர்களும் வாழ்த்தினர். தொடர்ந்து கமலின் குடும்பத்தாரான அவரது சகோதரி, அண்ணன் சாருஹாசன், சுஹாசினி, மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்டோர் வாழ்த்தினர். மலையாள நடிகர் மோகன்லாலும் வாழ்த்தினர்.
முன்னதாக நிகழ்ச்சி துவங்கியதும் போட்டியாளர்கள் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அவரின் பட பாடல்களை பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதை கேட்ட கமல், போட்டியாளர்களிடம் ''நீங்கள் பாடும் போது எனக்கு 2 பேர் ஞாபம் வருகிறார்கள். ஒருவர் இளையராஜா, மற்றொருவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கடந்த பல ஆண்டுகளாகவே என்னுடைய பிறந்தநாளில் எஸ்.பி.பி., என்னை சந்தித்து வாழ்த்து சொல்வார். கடந்தாண்டு அவரால் என்னை சந்தித்து வாழ்த்து சொல்ல முடியாத சூழல். அதனால் வாய்ஸ் மூலம் எனக்கு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தை இன்று நான் கேட்டேன். நான் இருக்கும் வரை இந்த குரலை கேட்டுக் கொண்டே இருப்பேன்'' என கூறியதோடு, போட்டியாளர்களிடமும் அந்த குரலை ஒலித்து காட்டினார். அதைக்கேட்ட கமல் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அவருடன் போட்டியாளர்களும் கலங்கினர்.