Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

07 நவ, 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Kamal-in-Telugu-Biggboss-show

தென்னிந்திய டிவி உலகில் 2017ம் ஆண்டு அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழில் கமல்ஹாசன் தொடர்ந்து 4வது சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் நாகார்ஜுனா போன சீசனுக்குப் பிறகு இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று(நவ., 7) கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் இடம் பெறுகிறார். அதற்கான புரோமோவை ஸ்டார் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திடீர் சந்திப்பில் தமிழ், தெலுங்கு போட்டியாளர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து கமல்ஹாசன் பேசும் வீடியோ ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவும் அங்குள்ள போட்டியாளர்களும் பார்க்கும் விதத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்திய டிவி சரித்திரத்தில் இப்படி இடம் பெற்றதில்லை என்று சொல்லலாம். கமல்ஹாசனை பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி வரவேற்கிறார் நாகார்ஜுனா. அங்குள்ள போட்டியாளர்களுக்கு தெலுங்கில் வணக்கம் சொல்கிறார் கமல்ஹாசன். இங்குள்ள பிக்பாஸ் வீடு ஹவுஸ்புல்லாக இருக்கிறது என கிண்டலடிக்கிறார் நாகார்ஜுனா.

தமிழ், தெலுங்கில் உள்ள இரண்டு போட்டியாளர்களும் பரஸ்பரம் பார்க்கும்படியும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இடம் பெறுவது போல, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாகார்ஜுனா இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அதற்கான புரோமோ எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் விக்ரம் பட தலைப்பில் கமல்ஹாசன்மீண்டும் விக்ரம் பட தலைப்பில் ... தந்தை மறைவு : ராய் லட்சுமி உருக்கம் தந்தை மறைவு : ராய் லட்சுமி உருக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

08 நவ, 2020 - 22:50 Report Abuse
Ranjit Kumar Kamal sir is legend
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08 நவ, 2020 - 05:04 Report Abuse
Mani . V இப்பொழுது உலகம் முழுவதும் இந்த "தொழில்தான்" ஏற்றம், இறக்கம் இல்லாமல் நடைபெறுகிறது. வரலாற்றில் நம்ம கமலஹாசனுக்கு நிச்சயம் இடமுண்டு.
Rate this:
சுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா
08 நவ, 2020 - 03:42 Report Abuse
சுனாமி என்னங்க டக்குன்னு இந்திய சரித்திரத்தில் நடந்தது இல்லை என்று சொல்லிடீங்ய ... வரும் சந்ததியினர் இவர்களை பார்த்து நிறைய சரித்திர சாதனை படைத்தது நம்மை மிரள வைப்பார்கள் பாருங்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in