பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
விஜய்சேதுபதி தமிழில் நடிக்கும் படங்கள் ஒரு பக்கம் வரிசை கட்டி நிற்க, இன்னொரு பக்கம் மலையாளத்தில் கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் புதிய படமான 19(1)(a) என்கிற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நித்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மலையாளத்தில் தேசிய விருது, படங்களான 'ஆதாமிண்ட மகன் அபு', 'பத்தேமாறி' உள்ளிட்ட படங்களை இயக்கிய சலீம் அஹமதுவிடம் பல வருடங்களாக உதவி இயக்குனராக பணியாற்றிய இந்து வி.எஸ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இருந்தாலும் இந்தப்படத்தை கமர்ஷியல் பாணியில் திரில்லர் படமாகத்தான் உருவாக்குகிறாராம். ..