பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழில் ஆவாரம்பூ படம் மூலம் அறிமுகமானவர் வினித். புதிய முகம், காதலர் தினம், மே மாதம், ஜாதிமல்லி, சந்திரமுகி படங்களில் நடித்தார். கடைசியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அடிப்படையில் நடன கலைஞரான இவர் கேரளாவில் நடன பள்ளிகள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளை நடத்துகிறார். சமீபகாலமாக மர்ம நபர்கள் வினித் பெயரில் போலி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து கேரள போலீஸ் டி.ஜி.பிக்கு, வினித் புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் எங்கள் குடும்ப படத்தையும் எனது சமூக வலைத்தள கணக்கையும் போலியாக பயன்படுத்தி மோசடி நடக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"எனது நண்பர் ஒருவரிடம் அவர் எனது நண்பர் என்பது தெரியாமல் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பேசி உள்ளது. அவர் தான் இந்த மோசடியை கண்டுபிடித்து என்னிடம் சொன்னார். அதனால் புகார் அளித்துள்ளேன். மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார் வினித்.