மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் நேற்று அவரது ஆழ்வார்பேட்டை வீடு, மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
சென்னை காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம டெலிபோன் ஒன்றில் பேசிய நபர், கமல்ஹாசனின் ஆழ்வார் பேட்டை வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார். கமலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அந்த போன் வெறும் மிரட்டல் போன் என்பது தெரியவந்தது.
இதேப்போன்று கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமார் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து நடத்திய சோதனையில் அதுவும் புரளி என தெரியவந்தது. தொலைபேசி எண்ணை வைத்து மர்மநபரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.