சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் தனது தனித்துவதமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். இன்று அவருடைய 67வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகத்தில் உள்ள பல பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மாதவன்
எனது அன்புக்குரிய நல்லசிவம். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள் சார். உடலும், நலமும் மகிழ்ச்சியுடன் இருக்கவும், இந்த வருடம் உங்களுக்கு மிகவும் நிறைவான வருடமாகவும் அமைய வாழ்த்துகள்.
மகேஷ் பாபு
சாதனையாளர் கமல்ஹாசன் சாருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவரது மேதமையைக் காட்டுவார். உண்மையாகவே உத்வேகத்தைக் காட்டுபவர். நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் எப்போதும் இருங்கள் சார்.
ராதிகா
சிறப்பான ஒரு நடிகர். புத்திசாலித்தனமான சிந்தனையாளர். சினிமாவின் அர்ப்பணிப்புள்ள காதலன். காலத்திற்கும் எண்ணங்களுக்கும் முற்பட்டிருக்கும் மனிதர், உங்களுக்கு சிறந்தது மட்டுமே கிடைக்க வாழ்த்துகள்.
மேலும், பல பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 232வது படத்தின் தலைப்பு வெளியாக உள்ளது.
ஆழ்வார்பேட்டையில் குவிந்த தொண்டர்கள்
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் இன்று தனது 66 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர். திறந்தவேனில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் வாழ்த்துக்களை ஏற்று கொண்டார்.
நான் அறிமுகப்படுத்திய நற்பணி என்ற சொல்
கமலின் பிறந்த நாள் முன்னிட்டு அவர் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் வெளியிட்டுள்ள அறிக்கையில் : என் நேசத்துக்குரியவர்களே ! துணிந்தபின் நான் தயங்குவதில்லை. தடைகள் கண்டு மயங்குவில்லை. எதிர்ப்புகள் கண்டு கலங்குவதில்லை. மக்கள் நலனே என் வாழ்க்கையின் நோக்கு. தமிழகத்தை சீரமைப்பதே நம் இலக்கு. நற்பணி என்ற சொல்லையே 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவன் நான். எனது பிறந்தநாளை நற்பணி தினமாக நினைத்து மக்களுக்கு நற்காரியங்களை செய்யுங்கள்.
கொரோனாவால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தெருக்கோடிக்கு சென்றால் கோடி பிரச்னைகள் காத்துக்கிடக்கிறது. தேடித்தீர்ப்போம் வா நற்பணி செய்ய. தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை சீரமைக்கும் முன்னோட்டமாக நமது காரியங்கள் எனது பிறந்தநாளில் துவங்கட்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.