மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தவிர, விஜே அர்ச்சனா மற்றும் பாடகி சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர்களாகியுள்ளனர். இரண்டாவது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகாவும், கடந்த வாரம் வேல்முருகனும் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் விரைவில் மேலும் சில போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ரோபோ சங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திராஜாவும், சீரியல் நடிகர் ஆசிம் ஆகியோர் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக ஒரு தகவல் வைரலானது. இதற்காக அவர்கள் இருவரும் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருந்தார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்து தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமை படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது
ஆனால் அந்தப் புகைப்படம் குறித்து இந்திரஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், 'தான் ஐதராபாத்தில் ஒரு படபிடிப்பிற்க்காக வந்துள்ளதாகவும், அங்கு தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் வதந்தி' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்திரஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது.