18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழித்தவர்களில் த்ரிஷாவும் ஒருவர். நிறைய புத்தகங்கள் படித்தார், நிறைய படங்கள் பார்த்தார், உடற்பயிற்சி, யோக செய்தார். இதோடு குறும்படத்தில் நடித்தார், ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு தூதுவராக இருப்பதால் அது தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து கொண்டார். கொரோனா காலத்தில் பசியுடன் வாடிய தெரு நாய்களுக்கு உணவளித்தார்.
இவற்றோடு குதிரை சவாரியும் கற்றிருக்கிறார். தன் பயிற்சிக்கு உதவிய குதிரையோடு உள்ள படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷா இதற்கு முன்பு துபாயில் ஸ்கைவாக் எனப்படும் விமானத்தில் இருந்து தரையில் குதிக்கும் விளையாட்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஸ்கூபா டைவிங் என அழைக்கப்படும் ஆழ்கடலில் நீந்தும் பயிற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.