சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
நடிகர், நடிகைகள் உடல்நலம் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. சில விஷமிகள் இதனை ஒரு பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் படும் துயரங்களை அவர்கள் உணர்வதில்லை. இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரண் உடல்நலம் பற்றி வதந்தி பரவியது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் இருக்கிறார். என்று அந்த வதந்தி பரவியது.
இதுகுறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றி அடிக்கடி இதுபோன்ற வதந்தி வந்து கொண்டிருக்கிறது. எனக்கு வேண்டாதவர்கள் செய்யும் வேலை இது. என்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்று கருதுகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். நல்ல உடல்நலத்துடன் என் வேலைகளை செய்து வருகிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு நானும், மீனாவும் இணைந்து நடித்துள்ள குபேரன் படத்தை வெளியிடும் பணியில் இருக்கிறேன். என்றார்.