பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. இவர் வனிதாவின் யூ டியூப் சேனலுக்கு வேலைக்கு வந்தவர். அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் சட்டபூர்வ திருமணம் செய்யாமல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ''பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டார். நான் ஏமாந்து விட்டேன். "இன்னும் அவர் மீது அன்போடு இருக்கிறேன். காலங்கள் மாறலாம் அதிசயம் நடக்கலாம்" என்றார் வனிதா.
இந்நிலையில் பீட்டர் பாலுடன் மீண்டும் இணைய வனிதா சமாதானத்திற்கு சென்றதாகவும், ஆனால் அவர் ஏற்கவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இதை மறுத்து வனிதா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பீட்டர் பாலோடு எந்த உறவும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இதற்கு ஒரு முற்றுப்புள்ளிளை வைத்து விட்டார்.
இதுப்பற்றி வனிதா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒரு ஆதாரமற்ற வதந்தி பரப்படுகிறது. அதாவது நான் அழைக்க சென்றதாகவும் என்னை நிராகரித்ததாகவும் வதந்திகள் பரவி வருகிறது. என் வாழ்க்கையில் நான் யாராலும் நிராகரிக்கப்பட்டதில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். நான் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது, நான் அவ்வாறு வளரவில்லை.
காதலில் என் அதிர்ஷ்டத்தை நான் புரிந்துகொண்டேன். எனது வேலை மற்றும் எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். தயவு செய்து இதை மேலும் ஊகித்து விவாதிப்பதை நிறுத்துங்கள். நான் அவருடன் சட்டரீதியான உறவிலோ, உணர்ச்சிகரமான உறவிலோ இல்லை. என் உணர்ச்சிகள் உணர்ச்சியற்றவையாகிவிட்டன. நான் என் வலியை என் வழியில் கையாள்கிறேன். எனது பயணம் பாஸிட்டிவிட்டியுடன் தொடரும்.
இவ்வாறு வனிதா கூறியிருக்கிறார்.