மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
அஜித், விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் எப்போது வரப் போகிறது என்று விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் ரசிகர்கள் 'வலிமை' படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும் என தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 'வலிமை' படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று தகவல் பரவியுள்ளது. மேலும், படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் 'ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்' என டுவிட்டரில் டிரெண்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அது அதிகாரப்பூர்வமான தகவலா இல்லையா என்பது தெரியாது. ஆனால், ரசிகர்கள் அந்தப் பெயரை இந்திய அளவில் டிரெண்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.
இதைப் பார்த்து விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, சீக்கிரமே அவர்கள் ஒரு டிரெண்டிங்கை ஏற்படுத்திவிடுவார்கள்.