பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கி, தொடர்ந்து பரபரப்பு செய்திகளில் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். அவர் ஒரு பேட்டி கொடுக்கிறார் என்றால் புதிய சர்ச்சைக்கு வித்திடுகிறார் என்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் சமீபத்தில் அவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார்..
குறிப்பாக நடிகர் ஹிரித்திக் ரோஷனை தான் காதலித்ததாக ஒரு செய்தி பரவியபோது, அவரிடம் இருந்து விலகிவிடும்படி தன்னை ஜாவேத் அக்தர் எச்சரித்ததாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் கங்கனா. இதை தொடர்ந்து தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை மீடியாவில் பரப்புகிறார் என கங்கனா மீது, மும்பை அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜாவேத் அக்தர்.