மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் கடந்த வாரத்திலிருந்து கடும் சண்டைகளுடன் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சக பெண் போட்டியாளரான சனம் ஷெட்டியை பாலா, 'தருதலை' என்ற வார்த்தையைச் சொல்லி கேலி செய்தார்.
அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன கேட்டுத் தெரிந்து கொண்ட சனம், பின்னர் பாலாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் தொடர்ந்து பாலா அந்த 'தருதலை' என்ற வார்த்தையை மீண்டும் சொல்லிச் சொல்லி சனமைத் திட்டி சண்டை போட்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று நீதிமன்ற செட்டப் செய்து அதில் பாலா, சனம் இருவரது சண்டை பற்றியும் விவாதித்தார்கள். அப்படி ஒரு தரமற்ற வார்த்தையை பாலா சொல்லியது தவறு என நீதிபதியாக செயல்பட்ட புது போட்டியாளர் சுசித்ரா எங்குமே சொல்லவில்லை. கடைசியில் பாலாவுக்கு ஆதரவாகத்தான் அவர் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், சனம் பற்றி பாலா ஆரம்பத்தில் வைத்த 'அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் போட்டியில் வென்றார்,' என்ற அவதூறு பற்றி சனம் எழுதிய புகாரில் இருந்த வார்த்தைகள் கொண்ட நேற்றைய நவம்பர் 3 முதல் புரோமோவை சர்ச்சை எழுந்ததும் விஜய் டிவி அதை நீக்கியது. அதை நீக்கினீர்கள் என்ற எதிர்ப்பு வந்ததையடுத்து அதை தற்போது மீண்டும் அப்லோட் செய்துள்ளார்கள்.
குழந்தைகள் முதல் பார்த்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தரமற்ற வார்த்தையை ஒரு பெண் போட்டியாளரை நோக்கி பாலா பயன்படுத்தியதை எந்த சந்தர்ப்பத்திலும் பிக்பாஸ் கண்டிக்கவேயில்லை.
கடந்த வருட சீசனில் பெண் அவமதிப்பு பற்றி எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை சரவணன் சொன்னதை அடுத்து அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள். ஆனால், இந்த சீசனில் முதலிலிருந்தே சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பாலா செய்தாலும் அவர் செய்வதை நியாயப்படுத்தும் வகையில் சம்பவங்களை திசை திருப்பும் வேலையை பிக்பாஸ் குழுவினர் செய்து வருகிறார்கள்.
கடந்த சீசனில் சரவணன் விவகாரத்தில் நியாயவாதியாகப் பேசிய கமல்ஹாசன் கூட இந்த சீசனில் பாலா விவகாரத்தில் அமைதி காக்கிறார். பாலா போன்றவர்களை வெளியில் அனுப்பிவிட்டால் நிகழ்ச்சி சுவாரசியமாகப் போகாது என்று பிக் பாஸ் குழுவினர் நினைப்பதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெண்கள் அவமதிப்பு நிகழ்ச்சியாகவும் பிக் பாஸ் தற்போது போய்க் கொண்டிருக்கிறது.
கெட்ட வார்த்தைகள், தரக் குறைவான வார்த்தைகள், பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் என பிக்பாஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் இடம் பெறுகின்றன. இதற்காகத்தான் டிவி நிகழ்ச்சிகள், ஓடிடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் சென்சார் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.