ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியாபட் உள்ளிட்டோரை வைத்து 'ஆர்ஆர்ஆர்' எனும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சுதந்திர போராட்ட கதையில் உருவாகும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் ஒரு முக்கியமான மலைவாழ் பெண் வேடம் உள்ளதாம். அதில் நடிக்க இவரை அணுகி உள்ளதாக தெரிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.