மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரேமம் படம் மூலம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சாய் பல்லவி. கிடைத்த படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல், தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் சாய் பல்லவி.
இரண்டு அதிகாரிகளுக்கு இடையேயான ஈகோ மோதல் தான் படத்தின் கதைக்களம். அதை யதார்த்தமான முறையில் படமாக்கியிருந்தார் இயக்குநர் சச்சி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் அய்யப்பனின் மனைவி கண்ணம்மா. தற்போது தெலுங்கு ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தான் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.
தமிழிலும் இப்படம் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.