'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் | சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய தமன் குமார் | தலை பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன் | கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல் | மின்னல் முரளி இயக்குனருடன் ஜீத்து ஜோசப்பின் புதிய படம் அறிவிப்பு |
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ஒரே வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மதுபாலா, அதன் பிறகு தமிழை ஒதுக்கிவிட்டு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். மலையாளத்திலும் கூட 1992ல் மோகன்லாலுடன் இணைந்து 'யோதா' என்கிற படத்தில் நடித்தார் மதுபாலா. அதன்பிறகு 2012ல் பாலாஜி மோகன் டைரக்ஷனில் உருவான வாயை மூடி பேசவும் என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த கொடுத்தார். அந்தப்படம் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியானது.
அதேசமயம் தற்போது 28 வருடங்கள் கழித்து நேரடி மலையாளப்படம் ஒன்றிலேயே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மதுபாலா. கடந்த வருடம் வெளியாகி, சமீபத்தில் கேரள அரசின் விருதுபெற்ற 'விக்ருதி' என்கிற படத்தை இயக்கிய எம்ஸி ஜோசப் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் மதுபாலா.