மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமான பிறகு படங்களைத் திரையிடும் புரொஜக்டர் கருவியும் டிஜிட்டல் மயமானது. அதற்கான டிஜிட்டல் மாற்றம், திரையீடு உள்ளிட்டவற்றை வழங்குவது 'விபிஎப்' (Virtual Print Fee) கட்டணம் என அழைக்கப்படுகிறது.
தியேட்டர்களில் அந்த சேவையை வழங்கும் விபிஎப் நிறுவனங்கள்தான் புரொஜக்டர் கருவியை நிறுவியுள்ளன. அந்தக் கருவிக்கான கட்டணத் தொகை உள்ளிட்ட விபிஎப் கட்டணங்களை இதுவரையிலும் படத்தின் தயாரிப்பாளர்கள்தான் தியேட்டர்காரர்களுக்கும், விபிஎப் நிறுவனங்களுக்கும் வழங்கி வந்தார்கள். படம் வெளியான நாளிலிருந்து அது ஓடும் நாட்கள் வரை கட்டணத்தில் சில வேறுபாடு இருக்கும்.
பிலிமில் திரைப்படம் திரையீடு செய்யப்பட்ட போது தியேட்டர்காரர்களே சொந்தமாக புரொஜக்டரை வைத்திருப்பார்கள். தியேட்டர்களுக்கு அனுப்பப்படும் பிலிம் கட்டணம் ஒரு காப்பிக்கு சுமார் 50 ஆயிரம் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்தது. அதைத் திரையிடும் தியேட்டர்களின் எண்ணிக்கைக்கு பிலிம் லேபுகளிம் பணம் கட்டி தேவையான காப்பிக்களை வாங்கிக் கொள்வார்கள். ஒரு பிலிம் சுழற்சி முறையில் பல தியேட்டர்களிலும், சில வருடங்களுக்கு பயன்படும்.
ஆனால், டிஜிட்டல் முறை திரையீடு வந்த பிறகு தியேட்டர்களில் திரையிடும் கட்டணத்தைக் கூட தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்குவதை தயாரிப்பாளர்கள் எதிர்க்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் முறையில் படங்களை 'மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணத்தை” மட்டுமே செலுத்துவோம் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள். ஆனால், தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்கள்தான் அதை வழங்க வேண்டும், தாங்கள் செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களுக்கு இந்த விபிஎப் கட்டணத்தை தியேட்டர்காரர்கள் வாங்குவதில்லை என்று தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் இன்று(நவ., 2) நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் விபிஎப் கட்டணத்தை ஒரு முறை மட்டுமே செலுத்துவோம். அதை ஏற்கும் வரையில் புதிய படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அணியினரும் விபிஎப் கட்டணத்தை யாரும் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
தயாரிப்பாளர்கள் அந்தக் கட்டணத்தைத் தர மறுப்பதால் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்களைத் திறந்தாலும் புதிய படங்கள் வெளியாக தற்போதைக்கு வாய்ப்பில்லை. விபிஎப் சேவை தரும் நிறுவனங்களும், தியேட்டர்காரர்களும் இந்த விவகாரத்தில் இறங்கி வரவில்லை என்றால் புதிய படங்கள் வராது என்றே தெரிகிறது. இது தொடர்பாக அடுத்து பேச்சு வார்த்தை நடக்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.