Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மீது பிரபாஸுக்கு காதல் - பாக்யஸ்ரீ

02 நவ, 2020 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Prabhas-had-crush-on-me-says-bhagyashree

பாக்யஸ்ரீ... 90 களின் ஹிந்தி சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நாயகி. அவர் நாயகியாக அறிமுகமான ஹிந்திப் படமான 'மைனே பியார் கியா' ஹிந்தியில் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஸ்பெயின் ஆகிய மொழிகளிலும் வெளியானது.

தமிழில் 100 நாட்களும், தெலுங்கில் 25 வாரங்களும் ஓடிய ஒரு படம். தன் முதல் படத்திலேயே நாடு முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் பாக்யஸ்ரீ. 'மைனே பியார் கியா' படம்தான் சல்மான் கான் நாயகனாக உயர்ந்த ஒரு படம்.

பாக்யஸ்ரீ அதன் பின் ஹிந்தியில் தன்னை நம்பர் 1 நடிகையாக முன்னேற்றிக் கொள்ளவில்லை என்றாலும் 'மைனே பியார் கியா' படத்தையும், பாக்யஸ்ரீயையும் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தில் பிரபாஸின் அம்மாவாக நடிக்கிறார் பாக்யஸ்ரீ. இப்படத்தின் படப்பிடிப்புன் போது பிரபாஸ், இயக்குனர் ஆகியோர் தன்னை விழுந்து விழுந்து கவனித்ததாகப் பாராட்டியுள்ளார் பாக்யஸ்ரீ.

மேலும், படப்பிடிப்பின் போது பாக்யஸ்ரீயை முதன் முதலில் சந்தித்த பிரபாஸ், அவர் மீது எப்போதும் ஒரு 'க்ரஷ்' உண்டு என்று சொன்னாராம். அதைச் சிரித்துக் கொண்டே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பாக்ய ஸ்ரீ.

'ராதே ஷ்யாம்' படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமாரும், நாயகன் பிரபாஸும் 'மைனே பியார் கியா' படத்தில் பாக்யஸ்ரீயை அவ்வளவு ரசித்துள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாக்டவுன் நெருக்கடியில் காஜலுக்கு அழகான திருமணப்புடவை செய்த தந்த ஆடை வடிவமைப்பாளர்லாக்டவுன் நெருக்கடியில் காஜலுக்கு ... விஸ்வரூபம் எடுக்கும் 'விபிஎப்' கட்டண விவகாரம் : புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கும் 'விபிஎப்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,ஈரான்
03 நவ, 2020 - 02:04 Report Abuse
Manian கிரஷ் ஒருநாள் உறவு, காதல் வாழ் நாள் உறவு காதல் மன்னன் ஜெமினி கணேஷு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in