Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாக்டவுன் நெருக்கடியில் காஜலுக்கு அழகான திருமணப்புடவை செய்த தந்த ஆடை வடிவமைப்பாளர்

02 நவ, 2020 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-shining-in-Yellow-saree

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளவர் காஜல் அகர்வால். கடந்த மாதம் 30ம் தேதி அவருக்கும், மும்பையைச் சேர்ந்த கௌதமுக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே மணப்பெண்ணான காஜல் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், திருமணம் மற்றும் வரவேற்பு என ஒவ்வொரு நிகழ்வின் போது அழகான உடைகளில் தேவதை போல் ஜொலித்தார் அவர். தனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை விதவிதமான புகைப்படங்களாக எடுத்து, அதனை தனது சமூகவலைதளப் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத் தொகுப்பில் மஞ்சள் நிற சேலையில் தங்கம் போல் ஜொலிக்கிறார் காஜல். கூடவே அவரது காதல் கணவரும் உள்ளார். காஜலுக்கு அந்த மஞ்சள் புடவை மற்றும் திருமணப் புடவையை செய்து கொடுத்தது பிரபல ஆடை அலங்கார நிபுணர் மனிஷ் மல்கோத்ராவாம்.

ஜூன் மாதம் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான சூழலிலும் தனக்கு இவ்வளவு அழகான புடவையை தயார் செய்து கொடுத்ததிற்காக மனிஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார் காஜல். அழகான அந்த மஞ்சள் நிறப் புடவைக்கு பொருத்தமாக மாஸ்க் ஒன்றையும் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

மற்ற புகைப்படங்களைப் போலவே இந்தப் புகைப்படத்திற்கும் காஜலின் ரசிகர்கள் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர். கூடவே காஜலுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் அதிகரிக்கும் அந்தாலஜி படங்கள்தமிழில் அதிகரிக்கும் அந்தாலஜி ... என் மீது பிரபாஸுக்கு காதல் - பாக்யஸ்ரீ என் மீது பிரபாஸுக்கு காதல் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in